தடைப்பட்டு மீண்டும் வந்த மின்சாரம்.. தாய்க்கும் மகனுக்கும் நேர்ந்த சோகம்..

2107

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் நிஷா. இவருக்கும், மூர்த்தி என்ற நபருக்கும், கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 5 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, நிஷா தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், இன்று பிற்பகல் 1 மணிக்கு, நிஷாவின் வீட்டில் மின்சாரம் தடை ஏற்பட்டு, மீண்டும் வந்துள்ளது.

இதன்காரணமாக ஏற்பட்ட மின்கசிவினால், நிஷாவும், அவரது மகனும் உடல் கருகி உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவால், தாய் மற்றும் மகன் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.