நான் கொஞ்சம் அழுவேன் பொறுத்துக்கோங்க – 4 மாத குழந்தை

879

தென் கொரியாவின் தலைநகரான சியோலிலிருந்து சான் பிரான்சிஸ்க்கோ செல்லும் விமானத்தில் ஒரு தாய் தன்னுடன் பயணிக்கும் சக பயணிகளுக்கு சில கேண்டி மிட்டாய்களும், சத்தம் கேட்காமல் இருக்க காதில் வைத்துக்கொள்ளும் பஞ்சு மற்றும் காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட குறிப்பு அடங்கிய ஒரு சிறிய பிளாஸ்டிக் கவரை வழங்கி வந்தார்.ஆர்வத்துடன் அதை வாங்கி படித்த பயணிகளின் முகத்தில் சிரிப்பு நிறைந்ததை பார்க்க முடிந்தது, அப்படி என்ன அதில் இருந்தது தெரியுமா?…

என் பெயர் ஜன்வூ, நான் 4 மாத குழந்தை.

இன்று நான் என் அம்மா, பாட்டியுடன் அமெரிக்கா செல்கிறேன்.

இது என் முதல் பயணம் என்பதால் எனக்கு பதட்டமாகவும் பயமாகவும் உள்ளது,

இதனால் நான் சத்தமாக அழுதாலும் அழுவேன் என்னால் உறுதியாக சொல்ல முடியாது அதனால் என்னை மன்னித்து விடுங்கள்.

இதற்காக என் அம்மா உங்களுக்கு சில கேண்டி மிட்டாய்களும், என் அழுகை சத்தம் கேட்காமல் இருக்க காதில் வைத்துக்கொள்ளும் பஞ்சும் இந்த பையில் வைத்துள்ளார்.

தயவுசெய்து நான் சத்தமாக அழுதால் அதை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

பயணம் இனிதாக அமையட்டும்..  நன்றி 🙂 

இவ்வாறு அந்த அச்சடிக்கப்பட்ட காகிதத்தில் இருந்தது.

இது குறித்து விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது முகநூல் பக்கத்தில்,

இது மனதை தொடும் சம்பவமாக இருக்கிறது, ஆனால் குழந்தை இருக்கும் பொழுது ஒரு தாய் எதிர்பாராத விஷயங்களை எதிர்பார்கக்கூடும் என்று பதிவிட்டுள்ளார்.