மகனுக்காக 1,400 கி.மீ. பைக் ஓட்டிய தாய்.. நெகிழ்ச்சி சம்பவம்..

842

தெலங்கானா மாநிலம் நிசாம்பாத் மாவட்டத்தில் உள்ள போதன் என்ற பகுதியை சேர்ந்தவர் ரைசா பேகம். இவரது மகன், ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்.

கொரோனா வைரசின் பரவலை தடுக்க 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ரைசா பேகத்தின் மகன் அங்கேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

இதனையறிந்த ரைசா பேகம், தனது மகனை மீட்க மாபெரும் முயற்சியை கையில் எடுத்தார். அதாவது, தனது மகன் நெல்லூரில் முடங்கியுள்ளதை, உதவி ஆணையரிடம் கூறி, வெளியே செல்வதற்கு அனுமதி பெற்றார்.

பின்னர், தெலுங்கானா மாநிலத்தில் இருந்து நெல்லூர் மாவட்டத்திற்கு தனது இருசக்கர வாகனத்திலேயே சென்றார்.

சுமார், 1400 கிலோ மீட்டர் பயணம் செய்த ரைசா பேகம், தனது மகனை அங்கிருந்து வெற்றிகரமாக மீட்டு வந்தார். அந்த தாயின் இச்செயல் பெரும் பாராட்டை பெற்று வருகிறது.