பிறந்து 16 மணி நேரம்.. குழந்தைக்கு தாயே செய்த கொடூரம்.. நீதிமன்றம் அதிரடி தண்டனை..

3936

டெல்லியை சேர்ந்த 34 வயது பெண்ணிற்கு, கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குழந்தை ஒன்று பிறந்தது. பிறந்து 16 மணி நேரங்களே ஆன நிலையில், அக்குழந்தையை தாயே குப்பை தொட்டியில் வீசிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

இதையடுத்து, அவ்வழியாக வந்த நபர், போலீசிற்கு தகவல் தெரிவித்தார். மேலும், அக்குழந்தையை மீட்டு, மருத்துவமனைக்கும் அழைத்து சென்றார். ஆனால், அக்குழந்தையை மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தது.

இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், குழந்தையின் தாயை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது, குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசி, அதன் உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததால், தாய்க்கு 4 வருடம் சிறைத்தண்டனை விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement