மகனிடம் தாய் செய்த கேவலமான செயல்..! கைது செய்த போலீஸ்..!

1246

அமொரிக்காவின் நியூயார்க் மாகானத்தில் ஒக்கலஹோமா என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், அவரது மகனுக்கு செய்த காரியம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் ஒன்றான ஸ்நாப் சாட்டில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், பெண் ஒருவர் தனது மகனிடம் மது பாட்டிலை எடுத்து வரச்சொல்கிறார். அதை அவரும் எடுத்துக்கொண்டு வருகிறார்.

பிறகு, மதுவைக் குடிக்க அந்த பாட்டிலை பெண் திறக்கிறார். பின்னர், தனது மகனைப்பார்த்து, நீயும் மது குடிக்கிறாயா..? என்று கேட்கிறார். இதையடுத்து, பாட்டிலின் மூடியில் சிறிது மதுவை ஊற்றி மகனுக்கு கொடுக்கிறார்.

அந்த பெண்ணின் மற்றொரு மகள் நடப்பவை அணைத்தையும் வீடியோ எடுத்துக்கொண்டு இருக்கிறார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.