“கள்ளக்காதலை கைவிட முடியவில்லை..” 10 மாத இரட்டை குழந்தைகளை கிணற்றில் வீசிய பெண்..!

704

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹேமஸ்ரீ. இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில், 10 மாத இரட்டை குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில், ஹேமஸ்ரீ-க்கும், உதய்குமார் என்பவருக்கும் கடந்த 4 மாதங்களாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதனையறிந்த குடும்பத்தினர், தகாத உறவை கைவிடும்படி ஹேமஸ்ரீ-யிடம் கூறி வந்துள்ளனர்.

இதனால், தங்களை உறவினர்கள் பிரித்து விடுவார்களே என்று அஞ்சிய கள்ளக்காதல் ஜோடி, 10 மாத குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயற்சி செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், மயக்க நிலையில் இருந்த கள்ளக்காதல் ஜோடியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பியதும், போலீசார் விசாரணையை தொடங்க உள்ளனர்.

தாயின் தகாத உறவால், எந்த சம்பந்தமும் இல்லாத குழந்தைகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.