3 பெண் குழந்தைகள்..! தாயே செய்த கொடூரம்..! காரணம் குடும்ப சூழ்நிலை..!

920

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சத்தியவதி. இவர் அங்குள்ள வெள்ளை ராஜன் வாய்க்காலில் தனது 3 குழந்தைகளையும் வீசி உள்ளார்.

வாய்க்காலில் மூழ்கி 6 வயதான அக்ஷயாவும் 2 வயதான ஷிவானியும் உயிழந்துள்ளன. மாயமான நந்தினி என்கிற குழந்தையை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தாய் சத்தியவதியிடம் சேத்தியாதோப்பு காவல்துறையினர் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப பிரச்சனை காரணமாக, 3 பெண் குழந்தைகளை வாய்க்காலில் வீசி தாய் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.