குறும்புத்தனம் செய்த மகளை கொலை செய்த தாய்

1003

தன் பேச்சைக் கேட்காமல் குறும்புத்தனம் செய்த மகளை, கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.

புனேவைச் சேர்ந்த சவீதா என்ற பெண் தனது கணவர் மற்றும் இருக்குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

சவீதாவின் மாமியார் கடந்த 10 நாட்களுக்கு முன் இறந்ததால், அவர் சோகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விரக்தியில் இருந்த சவீதா, விளையாடிக் கொண்டிருந்த மகள் தனது பேச்சை கேட்காததால், கோபத்தில் கொலை செய்துள்ளார்.

மகளை சுவரில் மோதி, கழுத்தை நெறித்து கெலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் சவீதாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.