தவறான உறவுக்கு ஆசைப்பட்டு பெற்ற மகனை விஷ ஊசி போட்டு கொன்ற தாய்!

344

வேலூர் மாவட்டம் அக்ராஹரத்தான் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சந்தியா. செவிலியரான இவருக்கும், சரவணன் என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.இந்த தம்பதிக்கு விரோஷன் என்ற 3 வயது ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குழந்தையுடன் சந்தியா தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இதனிடையே, சந்தியாவுக்கும், மற்றொருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது ஏற்பட்டுள்ளது. குழந்தையை கொன்று விட்டு தம்முடன் வந்தால் ஏற்றுக் கொள்வதாக சந்தியாவின் காதலர் கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில் வீட்டில் இருந்த குழந்தையை விஷ ஊசி போட்டு சந்தியா கொலை செய்தார்.இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தகாத உறவுக்காக பெற்ற மகனையே ஊசிப் போட்டு தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.