துண்டு துண்டாக வெட்டப்பட்ட மூத்த மகன்..! தாய் மற்றும் இளைய மகன் கைது..! அதிர்ச்சி காரணம்..!

403

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள முல்லைப்பெரியாறு ஆற்றங்கரையில் சடலம் ஒன்று இருப்பதாக நேற்று முன்தினம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கைகள், கால்கள் மற்றும் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தினர். சடலத்தின் தலை இல்லாததால் யார் கொலை செய்யப்பட்டவர் என்று போலீஸ் குழப்பத்தில் இருந்தனர்.

இதையடுத்து கம்பம் நந்தகோபாலன் கோயில் தெற்கு வாசல் தெருவைச் சேர்ந்த ராஜா என்பவரின் மூத்த மகன் விக்னேஷ்வரன் என்பது தெரியவந்தது. பின்னர், ராஜாவின் மனைவி செல்வியிடமும், அவரது இளைய மகன் விஜய் பாரத்திடமும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

அதில், விக்னேஷ்வரன் குடிபோதையில் தனது தாயிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டதாகவும், இதனால் கோபமடைந்த செல்வி தனது மகனை அடித்துக்கொன்றதும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, தனது இளைய மகனின் உதவியுடன் உடலை அப்புறப்படுத்தியதாகவும் செல்வி வாக்குமூலம் அளித்தார். இதைத்தொடர்ந்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of