எதிர்ப்பை மீறி மகள் செய்த காரியம்..! கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்..!

555

நெல்லை மாவட்டம் திசையன்விளை வடக்கு தெருவை சேர்ந்தவர் அமாராவதி. இவர் அவரது கணவர் உயிரிழந்த நிலையில், தனது 3 மகள்களை தனி ஆளாக வளர்த்து வந்துள்ளார்.

முதல் பெண்ணிற்கு திருமணம் ஆகிவிட்டது. 2-வது மகள் அபி கல்லூரியிலும், 3-வது மகள் பள்ளியிலும் படித்து வந்தனர். அபிக்கும், பக்கத்து வீட்டு நபர் சந்தோஷ் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.

இதனை அறிந்த அமாராவதி, சந்தோஷின் நடவடிக்கை சரியில்லாததால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் தாய் அமாராவதி காதலுக்கு சம்மதிக்காததால், கடந்த 14 ந்தேதி அன்று அபி வீட்டை விட்டு வெளியேறி சந்தோசை திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

சொல் பேச்சை கேட்காமல் சந்தோசை திருமணம் செய்து கொண்டதால், தனது மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஊர் முழுக்க ஒட்டியுள்ளார் அமாராவதி. மகள் காதல் திருமணம் செய்ததால் தாயே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.