கள்ளக்காதலனோடு வாழ, தனது இரண்டு குழந்தைகளுக்கும் கொன்ற கொடூர தாய்

524

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில், கள்ளகாதலனோடு சேர்ந்து வாழ்வதற்காக, தனது இரண்டு குழந்தைகளுக்கும் பாலில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து கொன்றதாக கொடூர தாய் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியில் வசித்து வருபவர் விஜய். தனியார் வங்கியில் பணிபுரிந்து வரும் இவருக்கு அபிராமி என்ற மனைவியும், அஜய் என்ற 7 வயது மகனும் கார்னிகா என்ற 4 வயது மகளும் இருந்தனர்.

இந்நிலையில், அலுவலகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை வீடு திரும்பிய விஜய், வெளிப்புறம் சாத்தப்பட்டிருந்த வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது, இரண்டு குழந்தைகளும் வாயில் நுரை தள்ளியப்படி கட்டிலில் இறந்து கிடப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும், வீட்டில் இருந்த மனைவி அபிராமி காணாமல் போய் உள்ளார். இதுகுறித்து, குன்றத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலை செய்யப்பட்ட இரண்டு குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததனர்.

வழக்கு பதிவு செய்துள்ள குன்றத்தூர் போலீசார் மாயமான அபிராமியை தேடி வந்தனர். அபிராமிக்கு கள்ளத் தொடர்பு இருந்துள்ளதாகவும், குழந்தைகளை கொலை செய்து விட்டு கள்ளக்காதலனோடு ஓடி சென்றதாக தெரியவிந்தது. இந்நிலையில் அபிராமியை போலீசார் கைது செய்தனர்.

அபிராமியிடன் போலீசார் நடத்திய விசாரணையில் தனது இரண்டு குழந்தைகளுக்கும் பாலில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Advertisement