இறந்த மகன் பணத்தை 8 ஆண்டுக்குப்பின் பெற்ற தாய்!

603

கேரளாவை சேர்ந்தவர் மேரிகுட்டி தாமஸ் (78). இவரது 2வது மகன்  ஷினோ (35). துபாயில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக ஷினோ இறந்தார். அவருக்கு திருமணமாகவில்லை. அதனால் அவர் தனக்கு பின் கிடைக்கும் பண பலன்களுக்கு வாரிசாக  தனது தாய் தனது மூத்த சகோதரனை குறிப்பிட்டு இருந்தார்.

இதனால் ஷினோ இறந்த பிறகு அவரது வங்கி சேமிப்பு பண பலன்களை பெறுவதற்காக அவரது சகோதரர் முயற்சி செய்தார். ஆனால் ஒரே ஆண்டில் அவரும் இறந்தார். இதனால் மனமுடைந்த மேரிகுட்டி ஷினோவின் பணப் பலன்களை பெறும் முயற்சியை கைவிட்டார்.

ஷினோ இறந்து 8 ஆண்டுகள் கழிந்த நிலையில் உறவினர்கள் உதவியுடன் துபாயில் இருக்கும் உயில் எழுதும் கம்பெனியின் நிறுவனர் முகமத் மரியா என்பவரை மேரிகுட்டி சமீபத்தில் தொடர்பு கொண்டார்.

அவர் ஷினோவின் பணத்தை பெற உதவி செய்தார். இதனால் ஷினோவுக்கு கிடைத்த மொத்தம் ₹75 லட்சத்தில் ₹33 லட்சம் மேரிகுட்டிக்கு கிடைத்துள்ளது. மீதமுள்ள தொகை அவரது மூத்த சகோதரருக்கு சேர வேண்டும்.

அவர் இறந்து விட்டதால் அந்த தொகை ஷினோவின் சகோதரனின் மனைவி குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement