வெற்றி பெற துடிக்கும் இளைஞர்களே!! இது உங்களுக்கான பதிவு !!

1168

வானம் தொடலாம் வா

வசதி வந்த பிறகு தாய் தந்தையரை விரட்டும் முட்டாள் மகன்களை போல நாங்களும் இந்த மேகங்களை விரட்டிக் கொண்டு தான் இருக்கிறோம். ஆம், நாங்கள் பறவைகள். உலகில் வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட முதல் உயிரினம் நாங்கள் என்பதில் சற்று பெறுமை தான் எங்களுக்கு. பெண்களுக்கு அளித்த உரிமைகளை போல தற்போது கொஞ்சம் குறைவாகத் தான் கூறியுள்ளேன் எங்களின் பெறுமைகளை. இத்தகைய இனத்தில் பிறந்த நான் என் வாழ்வின் லட்சியம் குறித்து கூறவுள்ளேன்.kuruvi

எனது லட்சியம் வானைத் தொடுவது, அதை என் கையால் கிள்ளி முத்தம் இடுவது. பள்ளிக் கூடத்தில் ஆசிரியரைப் பார்த்த மாணவர்கள் தினமும் சொல்லும் குட் மார்னிங்கை போல எந்தன் சக பயணிகள் கூறுவார்கள் உன்னால் முடியாது என்று. முயற்சிக்கும் வீன் முயற்சிக்கும் வித்தியாசம் தெரியவில்லையா என கேலி செய்வார்கள். அப்போது எனக்குள் தோன்றியன ஒன்றே ஒன்று தான். மலையை தூக்குவேன் என்றால் அது முயற்சி, அதை வெறும் கையால் தூக்குவேன் என்றால் வீன் முயற்சி என்பது தான்.

sparrow

பயணத்தை துவங்கினேன். வெகு நேரம் பறந்தேன், சிறகு வலித்தது. அசதிக்கும் அசரவில்லை, மீண்டும் பறந்தேன். இறகில் சின்ன சேதம் அடைந்தது. அதை சரி செய்யும் வரையில் வாய் மூச்சை மேலே தள்ளி மேலே பறந்தேன்.

மீண்டும் சரியாகிய இறகைக் கொண்டு முதல் அடி வைத்தேன், கொட்டும் அடைமழை முளைத்து என்னை தள்ளியது. மழையின் ஈரத்தால் எடை கொண்ட இறகைக் கொண்டு பறந்ததில் மூச்சுத் தினறியது. சிறகை உளற வைக்க பொழுது போக்கு என்ற மின்விசிறியை பயன்படுத்தினேன். சில நேரங்களில் மின் விசிறி புயலாக மாறியதும் உண்டு. மீண்டும் உலர்ந்தது சிறகு, உயர்ந்து நம்பிக்கை. பறந்தேன் வான் நோக்கி.

eagle

இரண்டே அடி என இருந்தது வானை தொட. பிறப்பினால் மட்டும் உயர பறந்து கொண்டிருக்கும் கழுகுகள் இருந்தது என்னை தடுத்து விட. கழுகுகளின் வாய்க்குள் சிக்கிக் கொண்டேன். அழிந்தேன் என நினைத்த கழுகுகளுக்கு அப்படி ஒரு அதிர்ச்சி, பகலில் நிலவைக் கண்டது போல். ஆம், அவர்களின் சிரிப்பு துவங்கிய பின், என்னுடைய பயணமும் துவங்கி விட்டது. கழுகுகளின் வாய் பிளந்த கணத்தில், எந்தன் பயணம் மீண்டும் பிறந்தது. மீண்டும் பறக்க துவங்கினேன்.

இன்னும் ஒரு அடி உயரத்தில் நான் ஏங்கிய வானம். தடங்கள் நேருமா என்று அர்ஜீணண் கண்களை கடன் வாங்கி பாரத்துக் கொண்டிருந்தேன். அடுத்த அடி எடுத்து வைத்தேன் அந்த வானில். அப்போது நான் பெற்ற அதிர்ச்சிக்கு அளவே இல்லை. ஆம், அது நான் நினைத்த வானமே இல்லை.

அப்போது தான் என் பயணம் துவங்கியது என்று மீண்டும் ஓட ஆரம்பித்தேன். அன்று தான் புரிந்தது, நாம் நினைக்கும் இலக்கிற்கு எல்லை இல்லை என. ஆனாலும் வானை தொட வேண்டும் என்ற ஆசை குறையவில்லை. துரத்திக் கொண்டு தான் இருந்தேன் என்றன் வானை.

வானை இலக்காக கொண்டதால் தான் இன்று இந்நிலை, குன்றை இலக்காய் கொண்டிருந்தால் எந்த நிலையோ.

என்னை போலத்தான் இன்னும் பல மனிதப் பறவைகள் ஏங்கிக் கொண்டிருக்கிறது. அதில் காது கேட்காதவை ஜெயிக்கும், அதன் வாழ்விலே வெற்றி என்ற ஒலி ஒலிக்கும்.

-வைரமுத்து தாசன்

Advertisement