பலமடங்கு உயர்த்தப்பட்ட அபராதம் – தற்போதைக்கு நிறுத்தி வைக்க தீர்மானம்

576

தற்போது அமலுக்கு வந்துள்ள மத்திய அரசின் மோட்டார் வாகன திருத்த சட்டத்தின்படி பலமடங்கு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 50ஆயிரம், 60ஆயிரம், 70ஆயிரம் என அதிகப்படியான அபாராதங்களால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர். இதனால் பல பகுதிகளில் போலீசாருக்கும், வானக ஓட்டிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில், மோட்டார் வாகன போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அதிகப்படியான அபராதம் வசூலிப்பதை தற்போதைக்கு நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.