ராபின் ஹூட் – ஹீரோவாக புது பரிமாணம் எடுக்கும் மொட்டை ராஜேந்திரன்

283

மூன்றாவது தலைமுறை ஸ்டண்ட் நடிகராக பல படங்களில் பணியாற்றியவர் ராஜேந்திரன், நான் கடவுள் படத்திற்கு பிறகு மொட்டை ராஜேந்திரன் என்ற தனி பட்டத்துடன் வலம்வருகிறார். பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களில் நடித்து தற்போது இந்த Stunt Man மிக பெரிய காமெடி நடிகராக மாறியுள்ளார்.

mottai rajendra

யாருக்கும் இல்லாத ஒரு குரல் வளம் இவரின் தனித்தன்மை என்றால் அது மிகையல்ல, காமெடி மட்டும் இல்லாமல் சில படங்களில் குணச்சித்திர நடிகராகவும் அவர் தோன்றியுள்ளார். படு பிசியாக நடித்து வரும் மொட்டை ராஜேந்திரன் அவர்கள் தற்போது அடுத்த பரிமாணமாக ஹீரோ என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.

motion poster

ராபின்ஹூட் என்ற படத்தில் இவர் ஹீரோவாக நடித்துள்ளார், தற்போது இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. மக்களை ஏமாற்றும் பணக்காரர்களிடம் இருந்து கொள்ளையடித்து அந்த பணத்தை மீண்டும் ஏழை எளிய மக்களுக்கே கொடுக்கும் ஹீரோ தான் ராபின் ஹூட், அந்த பெயரில் இந்த படம் வந்திருப்பதால், கதையும் அந்த பாணியில் இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் கிசுகிசுகின்றன.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of