‘பிளான் – B’ – போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் மவுலானா | Imran Khan

181

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தானின் கடன் சுமை 6 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 30 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இம்ரான் கான் அரசை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கடந்த சில மாதங்களாகவே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

இதில் கடந்த மாதம் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக ‘ஆசாதி மார்ச்’ போராட்டத்தை எதிர்க்கட்சிகள் நடத்தின. இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் எதிர்க் கட்சிகளின் ராஜினாமா கோரிக்கையைத் தவிர பிற கோரிக்கைகளை ஏற்பதாக இம்ரான் கான் தெரிவித்தார்.

இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக 13 நாட்கள் நடத்த இருந்த உள்ளிருப்புப் போராட்டத்தைக் கைவிட்டு தற்போது ‘பிளான் – B’ என்று கூறி நாடு முழுவதும் போராட்டத்திற்கு ஜாமியத் உலமா இ இஸ்லாம் பாஸ்ல் கட்சித் தலைவர் மவுலானா அழைப்பு விடுத்திருக்கிறார்.