Mouse-ஐ கண்டுபிடித்த நபர் மரணம்..!

591

கம்ப்யூட்டர் இல்லாத உலகை இன்றைய நாட்களில் நினைத்துக் கூட பார்க்க முடியாத சூழல் இருந்து வருகிறது. அந்த கம்ப்யூட்டரை இயக்குவதற்கு தேவையான முக்கியமான பொருட்களில் ஒன்று மவுஸ்.

மவுஸ் இல்லாமல் கம்ப்யூட்டரை பயன்படுத்தி பாருங்கள், தலைசுற்றி விழுந்துவிடுவீர்கள். அவ்வளவு முக்கியமான மவுசை உருவாக்கியவர்களில் ஒருவர் வில்லியம் இங்கிலிஷ்.

அமெரிக்காவின் கென்டக்கி பகுதியில் பிறந்த இவர், 1963-ஆம் ஆண்டு உலகத்தின் முதல் மவுசை கண்டுபிடித்தார்.

91 வயதான வில்லியம் இங்கிலிஷ், கடந்த 2 நாட்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவரது இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.