நகர்ந்து செல்லும் மலைச்சரிவுப்பகுதி – ஆச்சரிய வீடியோ

631

நீலகிரியில் தொடரும் கனமழையில் எமரால்டு மலைப்பகுதியில் மலைச்சரிவுப்பகுதி நகர்ந்து செல்லும் காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் வெளியேறிவருகின்றனர்.

நீலகிரிமாவட்டத்தில் சூறாவளிக்காற்றுடன்கொட்டித்தீர்க்கும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இரவுநேர போக்குவரத்திற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

உதகையை சுற்றியுள்ள அவலாஞ்சி, இத்தலாறு, மற்றும் எமரால்டு ஆகிய நான்கு பகுதிகளில் தொடரும் கனமழையால்  பலஇடங்களில் மண்சரிவு, சாலைகளில் பிளவு, நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டிருக்கின்றன.

எமரால்ட் சத்தியா நகர் பகுதியில் திடீரென மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலத்தில் நீளமாக பிளவும் ஏற்பட்டது. எமரால்டு பகுதியில் மலைச்சரிவு, ஆற்றுவெள்ளம் போல மணல்வெள்ளமாக நகர்ந்து செல்லும் காட்சி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்த காட்சியை இப்போது காண்போம்….

 

Advertisement