MPக்கள், MLAக்கள் மீதான குற்ற வழக்குகள் – தனி சிறப்பு நீதிமன்றம் தொடக்கம்

598

எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, தமிழகம் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 12 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்நிலையில், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன்படி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் உள்ள சிங்காரவேலர் மாளிகையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இதனை நீதிபதி ஹுலுவாடி ஜி ரமேஷ் திறந்து வைத்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலோடு அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு நீதிமன்றம், அதற்கான நீதிபதி பதவியேற்கும் நாளில் இருந்து செயல்பாட்டுக்கு வரும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீது மாவட்டங்களில் பதியப்பட்ட வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீது 265-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of