Ludo Game-ல் வென்ற தந்தை.. கோபத்தில் நீதிமன்றம் சென்ற மகள்..! இப்படியும் நடக்குமா..?

698

லுடோவில் வெற்றி பெற்ற தந்தைக்கு எதிராக மகள் செய்த காரியம், அனைத்து மீடியாக்களுக்கும் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான செய்தியை தற்போது பார்க்கலாம்.

மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியை சேர்ந்த 24 வயது பெண், தனது தந்தை மற்றும் குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்த லுடோ கேமை விளையாடியிருக்கிறார்.

அப்போது, அப்பெண்ணின் கேம் டோக்கனை தந்தை வெட்டியிருக்கிறார். இதனால், கடும் கோபத்திற்கு ஆளான அந்த பெண், குடும்பவியல் நீதிமன்றம் வரை சென்றிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய போபால் குடும்பவியல் நீதிமன்ற ஆலோசகர் சரிதா, “சில தினங்களுக்கு முன்பு, பெண் ஒருவர் என்னை சந்திக்க வந்திருந்தார். லுடோ கேமில் தந்தை தன்னை வெட்டியதால், அவருடனான உறவை முறித்துக்கொள்ள விரும்புகிறேன் என்று கோபத்துடன் கூறியிருந்தார். அதன் பிறகு அவருக்கு, கவுன்சிலிங் தரப்பட்டது. தற்போது மனம் மாறியிருக்கிறார்” என்று தெரிவித்தார்.

லுடோ கேமில் தந்தை வெட்டியதால், மகள் நீதிமன்றம் வரை சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.