கனிமொழி திடீர் கைது..! காரணம் என்ன..?

4532

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் பகுதியில், 19 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், திமுக சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது. சென்னை சின்னமலை பகுதியில் நடைபெற்ற இந்த பேரணியை, மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த பேரணியில், எம்.பி. கனிமொழி உட்பட திமுக தொண்டர்கள் பலர் கலந்துக்கொண்டனர். பேரணிக்கிடையே, திடீரென வந்த காவல்துறையினர், கனிமொழியை கைது செய்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Advertisement