பாஜக-அதிமுக கட்டாய திருமணம்!! திருநாவுக்கரசர் புரோகிதர் இல்லை!!! தம்பித்துரை தாக்கு!!!

528

கரூரில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களுக்கு போட்டியளித்தார். அப்போது,

‘தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சமீப காலமாக ஒருமையில் பேசுவதை கவனித்து இருப்பீர்கள். தங்களால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது, வெற்றி பெற முடியாது என்ற மன அழுத்தத்தால் அநாகரீகமான முறையில் பேசிக்கொண்டு இருக்கிறார்.தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியில்தான் ஒன்றரை லட்சம் இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழர்களுக்கு துரோகம் செய்த கட்சி மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அ.தி.மு.க. கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியால் தமிழக மக்களுக்கு லாபம் ஏற்படும்.’

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவரிடம் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை கட்டாய திருமணம் என்று விமர்சித்து உள்ளாரே? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தம்பிதுரை, திருநாவுக்கரசர் தற்போது பதவி இல்லாமல் அம்போ என நிற்கிறார். அவர் சொல்வதை யாரும் கேட்க வேண்டாம் என்றார்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of