‘சிக்ஸர் மன்னன்’-யை சமன் செய்ய ‘மிஸ்டர் 360’-க்கு ஒன்று தான் தேவை

281

அனல் பறக்கும் ஐபிஎல் போட்டியில் ரசிகர்களுக்கு விருந்துவைக்கும் வகையில் அனைத்து வீரர்களும் தங்களின் முழு அதிரடியையும் காட்டி பந்துகளை விண்ணில் ஏவுகனையாக மாற்றுகின்றனர்.

இவர்களை போலவே பந்து வீச்சாளர்களும் தங்களின் சுழலையும், அசுர வேகத்தையும் வெளிப்படுத்தி பேட்ஸ்மேன்களை நிலைகுலைய செய்கின்றனர்.

அந்த வகையில், சிக்சர்கள் விளாசி குதூகலப்படுத்துவதில் ‘யுனிவர் பாஸ்’ என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் இன்னும் ஜாம்பவானாக திகழ்கிறார். அவருக்கு ‘மிஸ்டர் 360’ என்று அழைக்கப்படும் ஏபி டி வில்லியர்ஸ் எந்த வகையில் சளைத்தவர் அல்ல.

நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக ஏபி டி வில்லியர்ஸ் 44 பந்தில் 3 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 82 ரன்கள் குவித்து ஆட்மிழக்காமல் இருந்தார். கிறிஸ் கெய்ல் 10 பந்தில் 23 ரன்கள் அடித்தார்.

82 ரன்கள் விளாசி ஆர்சிபி-யின் ஸ்கோர் 202 ரன்கள் உயர காரணமாக இருந்ததால் ஏபி டி வில்லியர்ஸ் ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் இது ஏபி டி வில்லியர்ஸின் 20-வது ஆட்ட நாயகன் விருதாகும்.

கிறிஸ் கெய்ல் 21 ஆட்ட நாயகன் விருதுடன் முதல் இடத்தில் உள்ளார். இவர் சாதனையை சமன் செய்ய டி வில்லியர்ஸ்க்கு இன்னும் ஒரு விருதுதான் தேவை. ரோகித் சர்மா, எம்எஸ் டோனி, டேவிட் வார்னர், யூசுப் பதான் ஆகியோர் 16 முறை ஆட்ட நாயகன் விருதை பெற்று 3-வது இடத்தில் உள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of