“தல”-யுடன் மோதும் சிவகார்த்திகேயன்

1030

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘மிஸ்டர்.லோக்கல்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் – நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது இப்படத்தை மே மாதம் 1ம் தேதி, அஜித் பிறந்த நாளில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதனிடையே அஜித்தின் நடித்து வரும் பிங்க் பட ரிமேக்கும் அன்று ரிலிசாக உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இருதரப்புக்கும் இடையே வலுவான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of