BCCI பட்டியலில் பெயர் இல்லை – கேள்விக்குறியில் தோனியின் எதிர்காலம்

356

பிசிசிஐ, சீனியர் பிரிவில் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்களின் வருடாந்திர ஒப்பந்த பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ள வீரர்கள் அக்டோபர் 2019 முதல் செப்டம்பர் 2020 வரையிலான காலகட்டத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்த பட்டியலில் தற்போது
இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரரும் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் டோனியின் பெயர் இடம்பெறவில்லை.

இந்த பட்டியலில் ‘ஏ பிளஸ்’ வகுப்பில், இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்டோர் தங்களது இடத்தை தக்க வைத்துக்கொண்டனர். இவர்களுக்கான ஆண்டு வருமானம் சுமார் 7 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் பெறும் ‘பி கிரேடு’ பட்டியலில், விர்திமான் சகா, உமேஷ் யாதவ், உஸ்வேந்திர சாகல், ஹர்திக் பாண்டியா, மயங்க் அகர்வால் என்று 5 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடித்தந்தவர் தோனி, அண்மைக் காலமாகவே தனது ஓய்வு குறித்து அவர் அடிக்கடி பேசிவந்தார். இந்நிலையில் பட்டியலில் அவர் பெயர் இடம் பெறாதது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of