“தல” தோனி வாங்கிய பழமையான கார்

245

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. இவரை ரசிகர்கள் செல்லமாக “தல தோனி” என்று அழைப்பர். இவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

தோனிக்கு நாட்டின் மீதும், இந்திய ராணுவத்தின் மீதும் மிகப்பெரிய பற்று உள்ளது. அதை உறுதி செய்யும் விதத்தில் அண்மையில் நிஸான் ஜோங்கா என்ற காரை வாங்கியுள்ளார். 1999ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட இந்த மாடல் கார் சுமார் 1 டன் எடைகொண்டது மட்டுமின்றி 20 வருட பழமை வாய்ந்ததாகும். இதனை பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவரிடம் இருந்து சொந்தமாக பெற்றுள்ளார்

இந்திய ராணுவம் இந்த மாடல் கார்களை நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தது. ஆனால், புதிய வாகனங்கள் வந்தபிறகு, இந்த கார்கள் பயன்பாட்டில் இருந்து குறைக்கப்பட்டது.

Dhoni-Car