கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தால் மட்டுமே திமுக ஆட்சிக்கு வரமுடியும்

516

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அய்யனார்புரத்தில் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன், தங்களின் சிறிய கவனக்குறைவு காரணமாக உள்ளாட்சி தேர்தலில் திமுக சில இடங்களில் வெற்றி பெற்று விட்டதாகவும், அடுத்து நடைபெறவுள்ள மாவட்ட உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகராட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் அதிமுக வெற்றி பெறும் என தெரிவித்தார்.

கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தால் தான் திமுக ஆட்சிக்கு வர முடியும் என கூறிய அவர், ஆனால் சூரியன் மேற்கே உதிக்க போவதுமில்லை திமுக ஆட்சிக்கு வர போவதுமில்லை என விமர்சனம் செய்தார்.

ஸ்டாலின் ஜாதி கலவரத்தை தூண்டிவிட்டு ஆட்சி செய்ய முயற்சிக்கிறார் என்றும் தற்போது அவரது கனவு பலிக்காது எனவும் அவர் கூறினார்.