மதுரையில் இருக்கும் மு.க.அழகிரிக்கு.., – சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்..!

1066

திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலினின் அண்ணனான மு.க.அழகிரி, கட்சியில் இருந்து தற்போது நீக்கப்பட்டார். இதற்கிடையில், சென்னையில் மாபெரும் பேரணியையும் நடத்தினார்.

இருந்தும் பெரும் மாற்றம் எதுவும் நடக்கவில்லை. இதனால் மு.க.அழகிரி மதுரையில் ஓய்வு எடுத்து வருகிறார். கடந்த வாரம் அழகிரி மகன் உட்பட குடும்ப உறுப்பினர்கள் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

இந்நிலையில் மதுரையில் ஓய்வில் இருந்து வரும் மு.க.அழகிரிக்கு உடல்நிலை சரியில்லததாகவும், மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இதனை அறிந்த மு.க.அழகிரியின் மகள் வழி பேரன் இதயநிதி கவனித்துக்கொள்கிறார் என்றும் கூறப்படுகிறது. அழகிரிக்கு உடல்நலக்குறைவு எனக் கேள்விப்பட்டதும் அவரது அபிமானிகள் சத்யசாய் நகர் இல்லத்திற்கு படையெடுக்கத் தொடங்கினார்கள் என்றும் பேசப்படுகிறது.