வெட்கமா இல்லையா! ஸ்டாலின் நறுக்!!

845

வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக- பாமக இடையேயான கூட்டணி உறுதியாக உள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், ‘அதிமுக உடன் கூட்டணி வைப்பதற்காக மக்கள் நலன்கள் சார்ந்த 10 கோரிக்கைகளை நாங்கள் முன்வைத்தோம்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமகவை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

அவை பின்வருமாறு:-

‘ 2009-ஆம் ஆண்டு அன்று அதிமுக உடன் கூட்டணி வைத்த பாமக படுதோல்வி அடைந்தது. அதிமுக பாமக கூட்டணி ஏற்கணவே மக்களால் தோற்கடிக்கப்பட்ட கூட்டணி.2009-ஆம் ஆண்டு அன்று ஏற்பட்ட நிலையே இந்த முறையும் பாமகவிற்கு ஏற்படும். அதிமுக ஆட்சியை விமர்சித்து புத்தகம் வெளியிட்டவர் ராமதாஸ். இவ்வாறு புத்தகம் வெளியிட்ட ராமதாஸ், தற்போது அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார். அவருக்கு வெட்கம், ரோசம் இல்லையா’ என்று தெரிவித்தார்.