ராணுவ வீரரின் குடும்பத்திற்கு ஸ்டாலின் ஆறுதல்!!

462

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

இதையடுத்து, வல்லநாடு, கே.டி.சி.நகர், சங்கர்நகர், கங்கைகொண்டான் வழியாக கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரிக்கு சென்றார்.

அங்கு காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு தி.மு.க. சார்பாக ரூ.2 லட்சம் நிதி வழங்கினார்.

இதை தொடர்ந்து அவர் தூத்துக்குடி அருகே உள்ள மேலக்கூட்டுடன் காடு பகுதியில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் பங்கேற்றார். பின்பு மங்களகிரி விலக்கில் நடைபெறும் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of