முகிலனை “காணவில்லை” சி.பி.சி.ஐ.டி

359

சமூக ஆர்வளரும் ஸ்டெர்லைட் போராளியுமான முகிலன் கடந்த சில நாட்களுக்கு முன் மாயமானார். கடந்த மாதம் 15ம் தேதி இரவு 10.30 மணியளவில் திரு. முகிலன் சென்னை எழும்பூர் புகையிரத நிலையத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட்டுள்ளார், அதன் பின் அவர் எங்கு சென்றார், தற்போது எங்கு இருக்கிறார் என்பது எல்லாம் மாயமே.

mugilan214.3.19

இந்நிலையில் அவரை கண்டுபிடித்து தருமாறு அவரது குடும்பத்தார் புகார் கொடுத்த நிலையில், அவரை விரைவில் கண்டுபிடிக்க ஆட்கொணர்வு மனுவும் அளிக்கப்பட்டது. இருப்பினும் இன்று வரை அவரை பற்றிய தகவல் எதுவும் கண்டறியப்படவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது, தற்போது சி.பி.சி.ஐ.டி திரு. முகிலனை கண்டுபிடிக்கும் நோக்கில் ஆங்காங்கே முகிலனை “காணவில்லை” என்ற சுவரொட்டிகளை ஓட்ட தொடங்கியுள்ளது.