உலக பணக்காரர்கள் பட்டியல்.. வாரன் பஃப்பெட்டை மிஞ்சிய முகேஷ் அம்பானி..!

540

இந்தியாவின் மிகமுக்கிய பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரி என்ற நிறுவனத்தை நடத்தி வரும் இவர், இந்தியாவின் வெற்றிகரமான பிசினஸ்மேன் ஆவார்.

இவரது வெற்றி இப்படி பூதாகரமாக வளர்வதற்கு, ஜியோ நெட்வெர்க் தொடங்கப்பட்டதும் ஒரு முக்கிய காரணம் ஆகும். இந்நிலையில், உலக பணக்காரர்கள் பட்டியல் சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

இதில், பெர்க்ஸ் ஹாத்வே நிறுவனத்தின் தலைவர் வாரன் பஃப்பெட்டை பின்னுக்கு தள்ளி, முகேஷ் அம்பானி 8-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

ஜியோ நெட்வொர்க் பங்குகள் அதிகமாக விற்கப்பட்டதே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. முகேஷ் அம்பானியின் சொத்த மதிப்பு, தற்போது 68.3 பில்லியன் டாலர் என்ற அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of