முகிலன் விசாரணை எந்த நிலையில் உள்ளது? சிபிசிஐடி-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

215

கடந்த மாதம் 14 ஆம் தேதி சென்னையில் இருந்து ரயில் மூலம் மதுரை புறப்பட்ட சுற்றுச்சூழல் போராளி முகிலன் காணாமல் போனதால் அவரை கண்டுபிடித்து தரக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி(CB-CID)-க்கு மாற்றி டி.ஜி.பி (DGP) உத்தரவிட்ட நிலையில், இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முகிலன் மாயமானது தொடர்பாக இதுவரை 148 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாக சி.பி.சி.ஐ.டி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக வரும் 18 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி-க்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தனர்.