கேரளா வெள்ளத்திற்கு முல்லை பெரியாறு காரணம் அல்ல – மத்திய நீர் ஆணையம்

782

கேரளா வெள்ளத்திற்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்தது காரணம் அல்ல என்று மத்திய நீர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை கேரளாவின் முக மூடியை கிழித்துள்ளது.

கேரளாவில் கடந்த மாதம் பெய்த பேய் மழையால் கடும் வெள்ளம் ஏற்பட்டது. இந்த அசாதாரண சூழ்நிலைக்கு தமிழகம் தான் காரணம் எனவும், முல்லை பெரியாறு அணையில் இருந்து முன்னறிப்பின்றி தண்ணீர் திறந்து விட்டதே கேரள வெள்ளத்திற்கு காரணம் என உச்சநீதிமன்றத்தில் கேரளா குற்றம்சாட்டி இருந்தது.

இந்நிலையில் கேரளா வெள்ளம் தொடர்பாக விரிவாக ஆய்வு நடத்திய மத்திய நீர்வள ஆணையம், நீர்வளத்துறை அமைச்சகத்திடம் அறிக்கை அளித்தது. அதில், அணை பாதுகாப்பு விதிகளின்படி, குறிப்பிட்ட அளவு மட்டுமே நீர் இருப்பு வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட அளவு காலியாகவோ அல்லது குறைவாகவோ வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

ஆனால் இந்த விதிகளை மீறி கேரளாவில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும், ஜூன் – ஜூலை மாதங்களில் மழை துவங்குவதற்கு முன்பே 200 சதவீதம் கூடுதல் நீர் சேமித்து வைக்கப்பட்டது என்றும், இதனால் எதிர்பாராத விதமாக ஆகஸ்ட் மாதத்தில் பெய்த கனமழையால் நீரை சேகரிக்கவோ, அணையின் நீர்மட்டத்தை குறைக்கவோ முடியாத நிலை ஏற்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அணை பாதுகாப்பு விதிகளை கேரளா மாற்றி அமைத்திருந்தாலே இத்தகைய பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தை தவிர்த்திருக்கலாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement