ரயில் முன் பாய்ந்த முதியவர்… பிச்சை எடுத்தவரின் வங்கி கணக்கு.. நாணயங்களை எண்ணுவதற்கு 1 நாள்.. – மிரண்டு போன போலீஸ்..!

1019

மும்பையில் பிச்சை எடுத்த நபர் ஒருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டவரின் வங்கி வைப்புத் தொகையை பார்த்து போலிசார் மிரண்டுபோயுள்ளனர். அதுமட்டுமின்றி அவர் வைத்திருந்த நாணயங்களை எண்ணுவதற்கு ஒரு நாள் முழுவதும் தேவைப்பட்டிருக்கிறது.

அவரது உடலை கைப்பற்றி விபத்து என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய ரயில்வே போலீஸ், அவரது வங்கி கணக்கின் சான்றிதழ்களை பார்த்தபொழுது மிரண்டுள்ளனர். 

ராஜஸ்தானை சேர்ந்த பினரிசாந்த் பன்னராம்ஜி அசாத் என்பவர் ரயிலின் முன்பு தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

மேலும் அவருக்கு அருகில் வசித்த ஒருவர் கூறுகையில்; உறவினர்கள் இன்றி தனியாக வசித்து வந்ததும், மும்பை ரயில் நிலையம் அருகில் பிச்சை எடுத்துவந்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறை துணை-கண்காணிப்பாளர் பிரவின் கம்ப்ளே  கூறுகையில்;

அசாத் பையிலிருந்து நாங்கள் 4 பெரிய டப்பாக்களை கைப்பற்றினோம். அதில் இருவேறு வங்கி கணக்குகள் கொண்ட பாஸ்புக் இருந்தது. அந்த வங்கி கணக்குகளில் 96ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அந்த வங்கி கணக்குகளுக்கான வாரிசாக(nominee) ருக்தேவ் என்பவரின் பெயரை கொடுத்துள்ளார்.

இவை அனைத்தும் நாணயங்களாகவே டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்த வங்கி கணக்குகளுக்கான  இதுஅல்லாமல் அவர் நிரந்தரவைப்பு வங்கி கணக்கில் 8 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. 

அதுமட்டுமல்லாமல், அவர் வைத்திருந்த டப்பாக்களை மேலும் சோதனை செய்து பார்த்தபொழுது அவரது பான் கார்டு,சீனியர் சிட்டிசன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்டவைகள் இருந்துள்ளன.

அந்த சான்றிதழ்களின் அடிப்படையில் அவர் பிப்ரவரி 27, 1937 ல் ராஜஸ்தான் மாநிலம் பைகான்வாடி ஊரில் உள்ள சிவாஜிநகர் என்னும் பகுதியில் பிறந்தது தெரியவந்தது.

 அவர் வைத்திருந்த நாணயங்களை எண்ணிப்பார்க்க எங்களுக்கு ஒருநாளுக்கு மேலாக தேவைப்பட்டிருக்கிறது. சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிறு மதியம் வரை நாணயங்கள் எண்ணபட்டது.இதில் 1,2,5 மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் பிளாஸ்டிக் பைகளில் கட்டப்பட்டு டப்பாக்களில் இருந்தன.

வங்கி கணக்குகளில் வாரிசாக கொடுக்கப்பட்டவரின் பெயரான சுக்தேவ் என்பவர் அசாத்-ன் மகன் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் விசாரணை நடத்தி வரும் காவல்துறை அசாத் மகனான சுக்தேவை தொடர்பு கொள்வதற்கான முயற்சியில் இறங்கியுள்ளதாக பிரவின் கம்ப்ளே தெரிவித்தார்.

அசாத்-ன் மகன் சுக்தேவ் ராஜஸ்தானில் உள்ள ராம்கார் பகுதியில் இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளதால் உள்ளூர் காவல்நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

82 வயதான அசாத் எதற்காக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார் என்று தெரியவில்லை. இதுகுறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of