மும்பையில் 9வது நாளாக பேருந்துகள் ஓடாததால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு

347

மும்பையில் 9வது நாளாக பேருந்துகள் ஓடாததால், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்களிடையே வேறுபாட்டை ஏற்படுத்தும் கொள்கைகளை கைவிடக் கோரியும், பணி நிரந்தரம், பாதை சீரமைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மும்பையில், தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இது தொடர்பாக தொழிற்சங்கத் தலைவர்கள், அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததால் போராட்டம் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மும்பையில், 9வது நாளாக பேருந்துகள் ஓடவில்லை.

இதனால், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆட்டோ, டாக்சி ஆகியவற்றின் பயணக்கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக மின்சார புறநகர் ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.