கணவனின் ஆசை..! மனஉளைச்சலுக்கு ஆளாகிய மனைவி..! இறுதியில் நேர்ந்த சோகம்..!

1126

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தை சேர்ந்த சுனில் கடம் என்பவருக்கும், பிரனாலி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சுனிலுக்கு அவருடைய சக ஊழியர் ஒருவரிடம் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விஷயம் சுனிலின் மனைவிக்கு தெரிய வந்ததையடுத்து, இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

மேலும், கள்ளக்காதலியின் மேல் இருந்த ஆசைக்காரணமாக, சுனில் தனது மனைவியை விலகிவிடும்படி துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மணஉளைச்சலுக்கு ஆளான பிரனாலி, தனது கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.

சம்பவத்தன்று சுனில் படுக்கை அறைக்கு சென்று தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது கத்தியுடன் அங்கு வந்த பிரனாலி, சுனிலை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சுனில், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதையடுத்து சுனிலின் பெற்றோரிடம், அவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் என்று கூறி கதறி அழுதுள்ளார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சுனிலின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு மருத்துவர்கள், 11 முறை உடலில் கத்தியால் குத்தப்பட்டுள்ளது. தானாகவே ஒருவர் இப்படி செய்திருக்க சாத்தியமில்லை என சந்தேகித்த போலீசார், பிரனாலியிடம் விசாரணை நடத்தினர்.

முதலில் மறுத்த பிரனாலி, தொடர் விசாரணைக்கு பின்னர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இதன் அடிப்படையில் பிரனாலி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of