ஆடைக்கு மேல் தொட்டால்.. பாலியல் வன்கொடுமை இல்லை.. ஐகோர்ட் உத்தரவால் அதிர்ச்சி..

1681

மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 39 வயதான நபர், 12 வயது சிறுமியிடம் அத்துமீறி நடக்க முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அதுதொடர்பான வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அதில், பாலியல் ரீதியான நோக்கத்துடன், உடலோடு, உடல் தொட்டால் மட்டுமே அது பாலியல் வன்கொடுமை. ஆடை அணிந்தபோது தொட்டால் அது பாலியல் வன்கொடுமை கிடையாது என்று தனது உத்தரவில் நீதிபதி தெரிவித்திருந்தார்.

இந்த உத்தரவிற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். மேலும் தேசிய பெண்கள் ஆணையம், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆடைக்கு மேல் தொட்டு தொந்தரவு செய்தால் அது பாலியல் வன்கொடுமை கிடையாது என்று கூறி குற்றம்சாட்டப்பட்ட நபரை விடுதலை செய்துள்ளது கவலைக்குரியது.இத்தீர்ப்பு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்று வாதிடப்பட்டது.

வாதங்களை கேட்ட பிறகு, உயர் நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைப்பதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement