மாஸ் காட்டிய பாண்டியா.., பெங்களூரை வீழ்த்திய ‘மும்பை’

346

அனல் பறக்கும் ஐபிஎல் போட்டியின் 31-வது லீக் ஆட்டத்தில் மும்பை அணியும், பெங்களூர் அணியம் மும்பை வான்கடே மைதானத்தில் மோதினர். இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பார்திவ் படேல், விராட் கோலி களமிறங்கினர்.

கோலி 8 ரன்னிலும், பார்திவ் படேல் 28 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய டி வில்லியர்ஸ், மொயின் அலி பொறுப்புடன் விளையாடினர். இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.மொயின் அலி 32 பந்தில் 5 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து இறங்கிய ஸ்டோனிஸ் ரன் எதுவும் எடுக்காமலும், அக்‌ஷ தீப் நாத் 2 ரன்னிலும் அவுட்டாகினர்.

அதிரடியாக ஆடிய டி வில்லியர்ஸ் 51 பந்தில் 4 சிக்சர், 6 பவுண்டரியுடன் 75 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட்ட்க்கு 171 ரன்களை எடுத்தது. இதையடுத்து மும்பை அணிக்கு 172 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இதில் மும்பை அணி சார்பில் லசித் மலிங்கா 4 விக்கெட் வீழ்த்தினார். பின்பு 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய மும்பை அணியின் அதிரடி ஆட்டக்காரர்களான டி காக், ரோகித் ஷர்மா ஆகியோர் களமிறங்கினர்.

டி காக், ரோகித் சர்மா இவர்களின் ஜோடி ஆரம்பம் முதலே அதிரடியை காட்டத்தொடங்கினர். இதில் டி காக் 40 ரன்களிலும், ரோகித் 28 ரன்களிலும் வெளியேறினர்.இவர்களுக்கு பின்பு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 29 ரன்களிலும், இஷான் கிஷன் 21 ரன்களிலும் தங்களது விக்கெட்டை இழந்தனர். அடுத்து களமிறங்கிய குருணால் பாண்டியா 11 ரன்களிலும், ஆட்ரிக் பாண்டியா அதிரடியை காட்டி அணியை வெற்றி பெற செய்ததுடன் 37 ரன்களுடம் களத்தில் இருந்தார்.

அலி, சஹால் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்தாண்டு இதுவரை நடைபெற்ற 8 ஆட்டத்தில் மும்பை அணி 5 வெற்றிகளுடன் அட்டவனையில் மூன்றாம் இடத்தில் உள்ளனர். பெங்களூர் அணி 7 தோல்விகளுடன் கடைசி இடத்தில் உள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of