புரோ கபடி – நான்காம் இடத்திற்கு முன்னேறிய யு மும்பை | Pro Kabadi

540

புரோ கபடி லீக் – இந்த போட்டியின் 7-வது தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நொய்டாவில் நேற்று இரவு நடந்த 130-வது லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் யு மும்பை அணிகள் மோதின.

ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 15-15 என சமனிலை வகித்தன. இரண்டாவது பாதியில் யு மும்பை அனி வீரர்கள் அதிரடி காட்டினர்.

இறுதியில், 39 – 33 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்திய யு மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் யு மும்பை அணி 69 புள்ளிகள் பெற்று நான்காவது இடம் பிடித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of