“என் தற்கொலைக்கு இதுதான் காரணம்” – சீரியல் நடிகையின் பரபரப்பு கடிதம்..!

808

ராஜஸ்தானின் உதய்பூரைச் சேர்ந்தவர் 26 வயதான சேஜல் ஷர்மா. மாடல் மற்றும் சீரியல் நடிகையான இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னால் தன் நடிப்புக் கனவை நிறைவேற்றுவதற்காக மும்பை வந்துள்ளார்.

இங்கு வந்ததும் மாடலிங், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பிஸியாக இருந்துள்ளார். இவரது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அமீர் கான், கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா ஆகிய பல முன்னணி பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இதனால் சேஜல் ஷர்மாவுக்கு சீரியல் வாய்ப்பு தானாகத் தேடி வந்துள்ளது. இந்தியில் பிரபலமான டி.வி நாடகத் தொடரான `தில் டோ ஹாப்பி ஹாய் ஜி’-யில் (Dil Toh Happy Hai Ji) ஹீரோவின் தங்கையாக நடித்துப் புகழ்பெற்றார்.

இதுமட்டுமல்லாது ஒரு சில வெப் சீரிஸிலும் நடித்துள்ளார் சேஜல் ஷர்மா. இந்த நிலையில், தான் வசிக்கும் மும்பை வீட்டில் இன்று காலை 4 மணிக்கு ஃபேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதை அறிந்த சேஜல் ஷர்மாவின் மற்ற நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இதையடுத்து, போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து சேஜல் ஷர்மாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்துவிட்டு அவரது வீடு மற்றும் அறையில் சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது அவரது அறையிலிருந்து தற்கொலை கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் தன் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்று சேஜல் ஷர்மா குறிப்பிட்டிருந்ததாகக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகை சேஜல் ஷர்மா, தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். சேஜல் ஷர்மா தற்கொலை செய்துகொண்டபோது அவரின் தோழிகளும் அதே வீட்டில்தான் இருந்துள்ளனர். ஒரே இடத்திலிருந்தும் நடிகையின் தற்கொலையைத் தடுக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடந்துவருகிறது.

உயிரிழந்த சேஜல் ஷர்மா பற்றிப் பேசியுள்ள சக நடிகர் அரு.கே வர்மா, “சேஜல் ஷர்மா தற்கொலை செய்துகொண்டது உண்மைதான். அந்தச் செய்தி எனக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.

கடந்த 10 நாள்களுக்கு முன்புதான் நான் அவரை நேரில் சந்தித்தேன். கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட தொலைபேசியில் உரையாடினேன். தற்போது அவர் இல்லை என்பதை என்னால் நம்பமுடியவில்லை. 10 நாள்களுக்கு முன்பு அவரைச் சந்தித்தபோது நன்றாகத்தான் இருந்தார்” எனக் கூறியுள்ளார்.

“சேஜல் ஷர்மா தன் தந்தையின் உடல்நிலையை நினைத்து மிகுந்த வருத்தத்திலிருந்தார். கடந்த நவம்பர் 15-ம் தேதி அவருக்கு மெசேஜ் செய்து நேரில் சந்திக்கலாம் எனக் கூறினேன். ஆனால், தான் தந்தையின் மருத்துவ அவசரத்துக்காக உதய்பூர் செல்வதாகக் கூறினார்.

தந்தைக்கு என்ன ஆனது எனக் கேட்டபோது, `மாரடைப்பு’ என்று மட்டும் பதில் கூறினார். கடந்த சில மாதங்களாகவே சேஜலின் தந்தை உடல்நிலையால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு கேன்சர் உள்ளது.

அதனுடன் சேர்ந்து மாரடைப்பும் ஏற்பட்டதால் உடல்நிலை ரொம்ப மோசமாகிவிட்டது. சேஜலின் தந்தை பற்றி நான் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பேன் அனைத்தும் சரியாகிவிட்டதாகக் கூறினார். தற்போதுதான் தெரிகிறது எதுவும் சரியில்லை என்று” இவ்வாறு தெரிவித்துள்ளார் சேஜலின் நண்பர் நிர்பய்.

இன்னும் சில நண்பர்கள், ‘ சேஜலின் சீரியல் நிறைவடைந்துவிட்டதால் வேறு வேலை தேடிக்கொண்டிருந்தார். தனக்கு வேலை இல்லை என்பதே அவருக்கு பெரும் கவலையாக இருந்தது. அதன் காரணமாகவே இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம்’ என்று தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of