“ரஜினி” கேட்ட அரசியல் கேள்வி..! அதிரடி பதில் சொன்ன கமல்..! எடிட் செய்த பிக்-பாஸ்..!

724

மக்கள நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமலஹாசன், பிக்-பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இவர் இதில் பேசும் அரசியல் தொடர்பான கருத்துகள், அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்துகிறது.

தனது அரசியலை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு எளிதாக கடத்தவே, இவர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்று அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் பிரபலங்களாக மாறி கமலை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

அதில் சேரன் மற்றும் தர்ஷன் கேட்ட கேள்விகள் மட்டும் எடிட்டிங்கில் கட் செய்யப்பட்டு இருந்தது. அவர்கள் என்ன கேள்வியை கேட்டார்கள் என்று மநீம கட்சியின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் அவரது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ரஜினி வேடம் அனிந்திருந்த சேரன், “நடிகர்களாக இருந்து மக்களை திருப்திபடுத்திய நாம், அரசியல் தலைவர்களாக மாறி, அந்த மக்களின் எதிர்பார்ப்புகள் திருப்தி அடைகிற மாதிரி வேலை செய்ய முடியுமா?”

என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த கமல்,

“முடியுமான்னு கேட்டீங்கன்னா, முனைந்தால் முடியும். அதற்கு, நான் என்பது நாமானால் கண்டிப்பாக முடியும். இது இந்த ரஜினி(சேரன்) வந்தாலும் சொல்லுவேன், அந்த ரஜினி வந்தாலும் சொல்லுவேன்”

என்றார்.

இவ்வாறு மநீம கட்சியின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.