ஆரம்பத்தில் செல்போன் பேச்சு… முடிவில் உயிர் போச்சு.. !

732

தேனி மாவட்டம் கம்பம் அருகே ஒத்தப்பட்டியைச் சேர்ந்த சின்னசாமி மகன் மணிகண்டன்(38) இவருக்கும் சின்னமனூர் பெருமாள்பட்டியை சேர்ந்த ராரேஸ்வரிக்கும்(31) திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளது.

மணிகண்டனும் , ராரேஜ்வரி தம்பி பாண்டீஸ்வரனும்(30) ஒன்றாக சேர்ந்து டீகடை நடத்தியுள்ளனர். அது நஷ்டத்தில் போனது. அதனால் தனித்தனியே வாழை இலை அறுக்கும் கூலி வேலைக்காக சென்று வருகிறார்கள்.

இவர்களின் குடும்பத்திற்கு முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் மணிகண்டனும் பாண்டீஸ்வரன் மனைவி நிரஞ்சனாவும் வெளியிடங்களில் சந்தித்து பேசி வந்தனர். இதனால் நிரஞ்சனாவிற்கும் அவரது கணவர் பாண்டீஸ்வரனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனை தொடர்ந்து மணிகண்டன் தனது குடும்பத்துடன் அருகில் உள்ள தெருவுக்கு குடியேறினார். ஆனால் மணிகண்டன் நிரஞ்சனாவிடம் பேசியதை போனில் வைத்திருந்தார். அதை தனது நண்பர்களுக்கும் காண்பித்துள்ளார்.

இதை குறித்து நிரஞ்சனாவிற்கு தெரிய வந்ததால் மிக கோபம் அடைந்து தனது பேச்சை குறைத்து கொண்டார். ஆனாலும் மணிகண்டன் நிரஞ்சனாவிற்கு தொடர்ந்து ஆபாசமாக பேசிவந்தார். இதை கேள்விப்பட்ட பாண்டீஸ்வரனுக்கும் அவரது மனைவி நிரஞ்சனாவுக்கும் மீண்டும் சண்டை தொடக்கியது.

இதனால் மணிகண்டனை பார்க்க பாண்டீஸ்வரனும் அவரது மனைவியும் வீட்டிற்கு சென்றனர். ஆனால் வீட்டில் யாரும் இல்லாததால் வேலை செய்யும் இடத்திற்கு சென்று பேசியுள்ளனர்.

ஆனால் பேச்சு வாக்குவாதமாக மாறி மணிகண்டனை பாண்டீஸ்வரனும் அவரது மனைவி நிரஞ்சானவும் கையில் வைத்திருந்த அரிவாளல் தாக்கி உள்ளனர் இதில் சம்வ இடத்தில் மணிகண்டன் உயிரிழந்தார். இதை தடுக்க முயன்ற ராஜேஸ்வரிக்கு காயம் ஏற்பட்டது.

பின்பு பாண்டீஸ்வரன் மற்றும் அவரது மனைவி நிரஞ்சனாவும் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of