தட்டிக்கேட்டதால் வெட்டி கொலை…

226

காஞ்சிபுரம் அருகே கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்டதால் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கஞ்சா வியாபாரி புருஷோத்தமன் மற்றும் அவனது கூட்டாளிகள் உட்பட10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரம் கிராமத்தை சேர்ந்த சஞ்சீவிராயன் என்பவர் விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு கோவில் கட்டியது தொடர்பாக கஞ்சா வியாபாரம் செய்யும் புருஷோத்தமனுடன் நேரடியாக பகை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் நள்ளிரவு குடிபோதையில் சஞ்சீவிராயன் இல்லத்திற்கு சென்று புருஷோத்தமன் தகராறு செய்துள்ளார்.

அப்போது சஞ்சீவிராயன் தங்கள் ஆட்களை வரவழைத்து, புருஷோத்தமனை துரத்தியுள்ளார். இதனால் தப்பியோடிய போது, புருஷோத்தமனின் ஆதரவாளர் முரளி என்பவர் கத்தி குத்து விழுந்து கீழே விழுந்ததால் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ஆபத்தான கட்டத்தில் மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக ஆவேசமடைந்த புருஷோத்தமன் வெளியூரை சேர்ந்த ரவுடிகளை வரவழைத்து, சஞ்சீவிராயனின் குடும்பத்தினரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் சஞ்சீவிராயனின் தம்பி தனஞ்ஜெயன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்நிலையில், கஞ்சா வியாபாரி புருஷோத்தமன் மற்றும் அவனது கூட்டாளிகள் உட்பட 10 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of