ஆப்பிள் வாட்ச் ஆர்டர் செய்த பிரபல இசையமைப்பாளர்..! காத்திருந்த அதிர்ச்சி..!

692

ஓர் இரவு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சேம். சி.எஸ். இந்த படத்தையடுத்து, புரியாத புதிர், விக்ரம் வேதா, கைதி, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் ஒன்றை பதிவிட்டார். அதில், “எனது சகோதரருக்கு பிறந்த நாள் பரிசு வாங்கிக்கொடுப்பதற்காக, பிலிப்கார்ட் நிறுவனத்தில் ஆப்பிள் வாட்ச் ஆர்டர் செய்திருந்தேன்.

ஆனால், ஆப்பிள் வாட்சிற்கு பதிலாக, கற்கள் அனுப்பி வைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தேன். இதுகுறித்து அந்த நிறுவனத்தில் புகார் அளித்தேன்.

ஆனால், அந்த புகாரை மறுத்த அவர்கள், பணத்தை திருப்பி தர முடியாது என்று கூறிவிட்டனர். இதனால், அந்த நிறுவனத்தில் இருந்து பொருட்களை வாங்காதீர்கள். அவர்கள் ஏமாற்றுக்காரர்கள்.”

இவ்வாறு அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Advertisement