நடிகை ஓவியாவை கைது செய்ய புகார்!

368

பிரபல நிகழச்சி ஒன்றின் மூலம் நடிகை ஓவியா பொதுமக்களின் இடம் பிடித்தார். இவருக்கு அந்த நிகழ்ச்சியின் மூலம், ஓவியா ஆர்மி என்ற பட்டாளமும் கிளம்பியது.

கடந்த 1 ஆம் தேதி ஓவியா நடித்த 90 எம் எல் என்ற திரைப்படம் வெளியாகியது. இந்த திரைப்படத்திற்கு, நடிகர் சிம்பு இசை அமைத்திருந்தார்.

இந்த திரைப்படம் வெளியான நாட்களில் இருந்து பல்வேறு சார்ச்சைகளில் சிக்கியது. இந்நிலையில் இன்று சென்னை மாநகர காவல் ஆணையரிடம், முஸ்லீம் லீக் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.

அதில், நடிகை ஓவியா நடித்துள்ள 90 எம் எல் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும், அந்த படத்தின் இயக்குநர் மற்றும் ஓவியாவை கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.