வீர சைவர்கள் மடத்திற்கு தலைவராகும் இஸ்லாமியர்

356

லிங்காயத் தலைவரான பசவன்னாவின் போதனைகளால் சிறுவயதிலிருந்தே ஈர்க்கப்பட்டவர் திவான் ஷரீஃப் ரஹிமன்சாப்.

வடக்கு கர்நாடகத்தின் கதக் மாவட்டத்தில் உள்ள லிங்காயத் மடத்தில் இந்த 33 வயது நிரம்பிய இந்த இஸ்லாமிய இளைஞர் மடாதிபதியாக ஆக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலபுரகிக்கு அருகில் உள்ள 350 ஆண்டுகள் பழமையான கோரனேஸ்வர சன்ஸ்தான் மடத்துடன் இணைக்கப்பட்டுள்ள முருகராஜேந்திர கோரனேஷ்வர சாந்திதாமா மடத்திற்கு அதிபதியாக ஆக இர்க்கிறார்.

இது குறித்து கூறிய ஷரீப் பசவண்ணாவின் சமூக நீதி மற்றும் நல்லிணக்க கொள்கைகளுக்கு ஏற்றவாறு செயல்படுவேன் என அவர் தெரிவித்து வருகிறார். ஷ்ரீஃப் -ன் தந்தை இந்த மடத்திற்கு மடம் அமைக்க 2 ஏக்கர் நிலம் நன்கொடையாக வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷரீஃப் திருமணம் ஆகி மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் வாழ்ந்து வருகிறார். மடத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஷரீஃப் மடாதிபதியாக ஆதரவு அளித்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of