”ஜெய் ஸ்ரீ ராம்” என சொல்லச்சொல்லி ரயிலிலிருந்து தூக்கிவீசப்பட்ட இளைஞர்

1563

”ஜெய் ஸ்ரீ ராம்” என்று சொல்லச்சொல்லி ஒரு இஸ்லாமிய இளைஞர் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் இந்துத்துவ அமைப்புகள், கும்பலாகச் சேர்ந்து இஸ்லாமியர்களைத் தாக்கி அவர்களை ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் எழுப்பச் சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

மோடி, இரண்டாவது முறையாக பதவியேற்றதிலிருந்து நாடு முழுவதும் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், இஸ்லாமியர் ஒருவரை, 12 மணி நேரம் மரத்தில் கட்டிவைத்து ஜெய் ஸ்ரீ ராம் சொல்லச் சொல்லித் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

அந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் அதேபோன்றதொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கான மதரசா பள்ளியில் ஆசிரியராக உள்ளார் ஹபீஸ் மோஹத் ஷாருக் ஹால்டர்.

இந்தத் தாக்குதல் குறித்து தெரிவித்த ஹபீஸ், ‘சௌத் 24 பார்கனாஸ் மாவட்டத்திலிருந்து ஹூக்ளிக்கு ரயிலில் சென்றுகொண்டிருந்தேன். அந்த ரயிலில் பயணித்த ஒரு கும்பல், என்னை ’ஜெய் ஸ்ரீ ராம்’சொல்லச் சொல்லி கடுமையாகத் தாக்கியது.

அப்போது, ரயிலில் இருந்த யாரும் உதவவில்லை. பார்க் சர்க்கஸ் ரயில் நிலையம் வரும்போது ஓடும் ரயிலிருந்து தூக்கி வீசிவிட்டனர். அங்கிருந்த சிலர் எனக்கு உதவி செய்தனர்.

இதுகுறித்து தெரிவித்த ரயில்வே காவல்துறையினர், ’ரயிலில் ஏறும், இறங்கும் பிரச்னையில் அவர் தாக்கப்பட்டிருக்கலாம். அவருடைய குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படும். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை’ என்று தெரிவித்தார்.

இதுகுறித்து தெரிவித்த கொல்கத்தா காவல்துறையினர், ‘இந்தச் சம்பவத்தை உறுதி செய்வதற்கான விசாரணை நடைபெறுகிறது. இந்தச் சம்பவத்தில், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தனர்.

1
Leave a Reply

avatar
1 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
Lalithavani Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
Lalithavani
Guest
Lalithavani

What can we expect from those capture power with Money and muscle power., and evm tampering