இலங்கை மக்களுக்காக கதறி அழுது பிரார்த்தனை

611

ஈஸ்டர் நாளில் மனித வெடிகுண்டுகளால் பலியான வவுனியாவில் இஸ்லாமியர்கள் கதறியழுதபடி இன்று பிரார்த்தனைகளை நடத்தினர்.

இலங்கையில் ஈஸ்டர் நாளில் தேவாலயங்கள், ஹோட்டல்களை குறித்து மனிதவெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இத்தாக்குதல்களுக்கு சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து மசூதிகளிலும் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தலாம் என தகவல் பரவியது. இதனால் வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் சிறப்பு தொழுகைகளை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் இன்று இலங்கையில் அனைத்து மசூதிகளிலும் வழக்கமான வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றது. கடுமையான சோதனைகளுக்குப் பின்னரே அனைவரும் மசூதிகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

வவுனியாவில் உயிர்த்த நாளில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி என சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. அப்போது இஸ்லாமியர் பெரியவர்களும் இளைஞர்களும் கண்ணீர்விட்டு கதறி அழுது பிரார்த்தனை செய்தனர்.


இதனிடையே இஸ்லாமிய பெண்கள் முகத்தை மறைக்கும் வகையில் புர்கா உடைகளை அணிவதை தற்காலிக தவிர்த்து போலீசாருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1
Leave a Reply

avatar
1 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
Raj Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
Raj
Guest
Raj

Enna nadippu Da saamy…Sivaji Pichai edukanum..